நேபாள் நிலநடுக்கம்: மந்த கதியில் மீட்பு பணி - போராட்டத்தில் குதித்த பொது மக்கள்


Mahalakshmi| Last Modified ஞாயிறு, 3 மே 2015 (15:58 IST)
நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையையே புரட்டி போட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு பணி தொடர்ந்து நிதானமாக நடைபெறுவதால் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
 

சமீபத்தில் அரங்கேறிய நேபாள் நிலநடுக்கம் பல உயிர்களை மண்ணோடு மண்ணாக்கி விட்டது. சுமார்  6,700 உடல்கள் இதுவரை அதிகார பூர்வமாக மீட்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் இடிபாடுகளில் மனித சடலங்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணப் பொருட்களும் கிடைக்க வில்லை என புகார்களும் எழுந்துள்ளன. அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுமாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :