வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மே 2015 (15:57 IST)

அவசர உதவிகளுக்காக ஹெலிகாப்டர்களைக் கோருகிறது நேபாளம்

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது 6200 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக பன்னாட்டு அரசுகளிடம் கூடுதலான ஹெலிகாப்டர்களை நேபாள அரசு கோரியுள்ளது.


 
தொலைதூர மலைப் பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை எடுத்துச் சென்று வழங்கவும், காயமடந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாக நேபாள அரசு கூறுகிறது.
 
அதேபோல சாலைவசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் இவை தேவை எனவும் கூறப்படுகிறது.
 
இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களை வான்வழியாக மீட்பது தொடர்பில் கைகலப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டவுடன் யாரும் உரிமை கோரவில்லை என்றால் அவை உடனடியாக தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அழுகிய உடல்களில் இருந்து வரும் துர்நாற்றம், கலக்கத்திலுள்ள உயிர் பிழைத்தவர்கள், தமது இல்லங்களுக்கு திரும்புவதற்கு சிரமங்களை ஏற்படுத்துகிறது என அரசு கூறுகிறது.
 
இந்தக் கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தது தமக்கு இரண்டு பில்லியன் டாலர்கள் தேவை என நிதி அமைச்சர் ராம் ஷரன் மஹத் தெரிவித்துள்ளார்.