வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (07:24 IST)

நேபாளத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு

நேபாளம் மற்றும் வட இந்தியாவில் நேற்று இண்டாவது முறையாக, நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.7 ரிக்டர் அளவாகப் பதிவானது.


 

 
இந்த நிலநடுக்கத்தால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
நேபாளம் நாட்டின் கோதாரிக்கு தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுஉள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக, நேற்று காலை அங்கு மீண்டும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடது .
 
இந்நிலையில்  நேற்று மீண்டும் 2 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள்  பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
நேபாளத்தில், இதுவரை இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிச்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2400ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.