Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மனிதர்கள் எல்லோரும் ஏலியன்கள்; அதிர்ச்சியளிக்கும் நாசா

Mars
Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (16:33 IST)
மனிதர்களுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், மனிதர்கள் அங்கிருந்து வந்திருக்கலாம் என்றும் நாசா தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

 

 
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. அண்மையில் உயிரினம் வாழ்வதற்கான சூழல் உள்ளதாகவும் அதை மேம்படுத்த விண்கலம் மூலம் பாசிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் நிலவிய பலவிதமான கால நிலைகளை வைத்து அறிக்கை ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.
 
அதில், செவ்வாய் கிரக உயிர்கள், மனித இனத்தின் தோற்றம், உயிர் தோன்றியதன் தொடக்கம் என பலவற்றை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தோன்றியிருக்கலாம் என்றும் ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை நாசா தெரிவித்துள்ளது.
 
செவ்வாய் கிரகத்தில் கிடைத்த சில படிமங்களில் உயிர்களின் அடையாளங்கள் கிடைத்துள்ளது. இப்போது செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இல்லை என்றாலும் ஒருகாலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம். 3.7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு அங்கு உயிர்கள் இருந்ததற்கான சில தடயங்கள் கிடைத்துள்ளது என நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :