1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (13:26 IST)

10 நாட்களில் பூமிக்கு வரவிருக்கும்.... நாசா அதிர்ச்சி தகவல்!!

சூரியனை விண் கற்கள் சுற்றி வருகின்றன. அதுபோன்று ஒரு விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. 


 
 
கடாலினா ஸ்கைசர்வே நிறுவனத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு இதை கண்டறிந்தனர்.
 
இதற்கு 2014 ஜே.ஓ.25 என பெயரிடப்பட்டுள்ளது. அது 650 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய விண்கல். 
 
இது பூமியின் மீது மோதும் அபாயம் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அது வருகிற 19 ஆம் தேதி பூமியை கடந்து செல்லும் என நாசா அறிவித்துள்ளது. 
 
இது 18 லட்சம் கி.மீ. தூரத்திலேயே பூமியை கடக்கிறது. இந்த விண்கல் சந்திரனை போன்று 2 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.