செவ்வாய் கிரகத்தில் வீடுகள்: நாசா அறிவிப்பு!!


Sugapriya Prakash| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (12:19 IST)
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் தங்குவதற்கு, டோனட் வடிவ பனிவீடுகள் அமைக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

 
 
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அங்கு நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்வர். செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை, வெப்பநிலை, காஸ்மிக் கதிர்வீச்சு ஆகியவற்றின் ஊடுருவலை தடுக்க வேண்டும். 
 
எனவே தங்கும் பொழுது, சுற்றுப்புற காரணிகளால் பாதிக்காமல் இருக்கும் வகையில் இருப்பிடம் உருவாக்க வேண்டும். செவ்வாய் கிரகத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இருப்பிடம் அமைக்க திட்டமிடப்பட்டது. 
 
இந்நிலையில் ”The Ice Home” என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, மிகப்பெரிய டோனட் வடிவிலான இருப்பிடத்தை உருவாக்க வேண்டும். இது பனி படர்ந்த நிலையில் தண்ணீருடன் இருக்க வேண்டும்.
 
எனவே இதனை செயல்படுத்துவது குறித்து பல்வேறு சாத்தியமான விஷயங்களை நாசா ஆய்வு செய்து வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :