1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Lenin AK
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (20:09 IST)

புதன் கிரகத்தில் பனிக்கட்டி - நாசா கண்டுபிடிப்பு

புதன் கிரகத்தில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்திருப்பதை நாசா விஞ்ஞானிகள் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
 
சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதனால் புதனின் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.
இது பூமியில் நிலவும் வெப்பநிலையில் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
 
இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய புகைப்படங்களில் இது தெரியவந்துள்ளது.
 
இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், "இது எங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்தப் புகைப்படத்தின் மூலம் இன்னும் நிறைய விஷயங்களை குறித்து ஆராய்வதற்கு உதவிகரமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
 
இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சமிக்ஞை மூலமும் தெரியவந்துள்ளது. புதன் கிரகத்தில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து கிடப்பது கண்டறியப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.