வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (18:18 IST)

பலரது உயிரிழப்பினால் எல்லையில்லா வலியை உணர்கிறோம் - தீவிரவாத தாக்குதல் குறித்து மோடி பேச்சு

தீவிரவாத தாக்குதலில் பலரது உயிரிழப்பில், முடிவில்லா வலியை உணர்கிறோம் என்று சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
 
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் 18ஆவது சார்க் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
 

 
இக்கூட்டத்தில் கலந்து கொன்டு பேசிய நரேந்திர மோடி, "2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின் கொடூரத்தை இன்று நாஙகள் நினைவில் கொள்கிறோம். நாங்கள் தாக்குதலில் பலரது உயிரிழப்பின் மூலம் எல்லையில்லா வலியை உணர்கிறோம்".
 
மேலும், "நாம், தீவிரவாதம் மற்றும் பன்னாட்டு குற்றங்களை எதிர்த்துப் போரிட ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று சார்க் உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
2008ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மும்பையில், பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதன் 6ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.