Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

130 மனைவிகள், 203 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த மத போதகர் மரணம்!

Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (14:48 IST)

Widgets Magazine

130 பெண்களை திருமணம் செய்துகொண்டு, 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த 93 வயதுடைய பிரபல இஸ்லாமிய மத போதகர் திடீரென காலமானார்.


 

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பிடா பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் பாபா மசபா என்றழைக்கப்படும் மொஹமது பெல்லோ அபுபக்கர் (93). இவருக்கு 130 மனைவிகளும், 203 பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கண்டறிய முடியாதை நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அபுபக்கர், கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது சடலத்தைப் பார்க்கவே அப்பகுதியில் உள்ள எண்ணற்றவர்கள் திரண்டுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு ’நைஜீரியா டெய்லி டிரஸ்ட்’ என்ற தினசரி நாளிதழ், அபுபக்கர் 86 மனைவிகளோடு வசித்து வந்ததை அம்பலப்படுத்தியது. இதனையடுத்து அபுபக்கர், 48 மணி நேரத்துக்குள் 82 மனைவிகளையும் விவகாரத்து செய்ய வேண்டும் என முஸ்லிம் மத போதகர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் இந்த கட்டளையை ஏற்காத அபுபக்கர், மேலும் கூடுதலாக 44 பெண்களை திருமணம் செய்து, இறுதியில் 130 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு 203 பிள்ளைகளும் உள்ளனர். மேலும், சில மனைவிகளும் தற்பொழுது கர்ப்பமாக உள்ளதாக தெரிகிறது. இதனால், குழந்தைகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அவருடைய மனைவி ஒருவர் கூறுகையில், ’நான் மேல்நிலை வகுப்பு பயிலுகையில் எனது தாயார் அவரிடம் அழைத்துச் சென்றார். அப்போது அபுபக்கர் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினார்.

ஆனால், திருமணம் செய்துகொள்ள முடியாது நான் மறுத்தேன். ஆனால், இது கடவுளர்களின் நேரடி உத்தரவு என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா தலைமையில் ஜல்லிக்கட்டா?: போராடிய மாணவர்களுக்கு இது பெரிய இழிவு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் வெகுண்டெழுந்து ...

news

இந்திய பெண்ணிடம் தாய்ப்பால் சுரப்பு சோதனை - விமான நிலைய அதிகாரிகள் அடாவடி

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் ஒருவரிடம், ஜெர்மனி விமான நிலைய அதிகாரிகள் தாய்ப்பால் ...

news

வேற்று கிரகங்களில் வாழ்வாதாரம்: நாசா ஆய்வு!!

வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ சாத்தியமா என்று நாசா புதிய முறையில் ஆய்வு செய்து ...

news

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர்கள் குனிந்து நிற்கும் சிலை அமைக்க வேண்டும்: ராமதாஸ் கிண்டல்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைச்சர்கள் குனிந்து நிற்கும் சிலை ...

Widgets Magazine Widgets Magazine