Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொலையில் முடிந்த கொண்டாட்டம்: பிரேசிலில் கொடுமை!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (15:12 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முன்னாள் மனைவி உள்பட 11 பேரை சுட்டுக் கொன்றவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்.

 
 
பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ மாநிலத்தின் காம்பினாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் மது விருந்துடன் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. 
 
அப்போது, அந்த வீட்டின் மதில்சுவரை தாண்டி உள்ளே குதித்த சிட்னி ராமிஸ் டி அராஜோ (49) என்பவர், கையில் துப்பாக்கியுடன் வீட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே புகுந்தார்.
 
அங்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முன்னாள் மனைவி மற்றும் அவரது 8 வயது மகனை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றார். மேலும் புத்தாண்டு விருந்தில் பங்கேற்ற மேலும் 8 பேரை சுட்டுக் கொன்ற அந்நபர் இறுதியாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :