10வது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்த தாய்: லண்டன் தீவிபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்


sivalingam| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (06:35 IST)
நேற்று அதிகாலை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 24 அடுக்குகள் கொண்ட 'கிரென்ஃபெல் டவரில்' நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்


 


இந்த நிலையில் நேற்று அந்த கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் போராடி வந்த போது, ஒரு தாய் தனது பச்சிளங் குழந்தையை 10-வது மாடியிலிருந்து கீழே தூக்கி போட்டதாகவும், இதை பார்த்த மீட்புக்குழுவில் இருந்த ஒருவர் தூக்கி எறியப்பட்ட குழந்தையை சரியான நேரத்தில் பிடித்ததாகவும் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.

அந்த குழந்தையின் தாய்க்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இருப்பினும் தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது குழந்தை காப்பாற்றபப்ட்டால் போதும் என்ற அந்த தாயின் உயர்ந்த குணம் குறித்து தான் இங்கிலாந்து முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :