வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2014 (15:19 IST)

23 வயதில் காணாமல் போனவரின் சடலம் 32 ஆண்டுகள் கழித்து கிடைத்தது

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு பனிமலை ஏறும்போது காணாமல் போன 23 வயது நபரின் சடலம் 32 ஆண்டுகள் கழித்து தற்போது கிடைத்துள்ளது.
மொண்ட் பிளான்க் பனிமலையின் மீது கடந்த 1982 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி, தனியாக ஏறத்துவங்கிய 23 வயது பாட்ரிஸ் ஹைவேர்ட் என்பவர் திடீரென வானிலை மாறியதால் காணாமல் போனார்.
 
பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, பாட்ரிஸ் இறந்ததை உறுதி செய்த மீட்பு படையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
இச்சம்பவம் நடைபெற்று 32 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது தலேப்ரே பனிமலைக்கு சென்ற இரு மலையேற்ற வீரர்கள் 2600மீட்டர் உயரத்தில் ஒரு சடலம் இருப்பதாக தகவல் கொடுத்தனர்.
 
மலையேற்ற வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பார்த்தபோது, அது 23 வயதில் காணாமல் போன பாட்ரிஸ் ஹைவேர்ட்டின் சடலமென தெரியவந்தது.
 
சுமார் 32 ஆண்டுகள் கழித்து மீட்க்கப்பட்ட அந்த சடலத்தில், பாட்ரிஸ் ஹைவேர்ட்டின் அடையாள அட்டை இருந்ததால் எளிதாக கண்டறிய முடிந்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து தெரிவித்த பாட்ரிஸ் ஹைவேர்ட்டின் தந்தை, என் மகன் காணாமல் போனதால், அவன் எங்கோ உயிரோடு இருக்கிறான் என நம்பியிருந்தேன். ஆனால், நான் இந்த உலகை விட்டு போவதற்கு முன்பே எனது மகனின் சடலத்தை பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என வருத்தம் தெரிவித்தார்.