வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2018 (19:25 IST)

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!

ஜப்பான் விவசாயிகள் வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கே என பெயரிடப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட சுவையானதாம். 
 
அதோடு இதன் தோலையும் சாப்பிட முடியுமாம். சாதாரண வாழைப்பழங்களில் தோல் தடிமனாகவும் கசப்பு சுவை அதிகமாக கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிக குறைவான கசப்பு தன்மை கொண்டுள்ளதாம்.
 
இந்த வாழைபழத்தை உறைய வைத்து வளர்த்தல் என்ற முறையில் உருவாக்கியுள்ளனர். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த விளைச்சல் முறையாகும். இது 4 மாதங்களிலேயே முதிர்ச்சியடைந்து விடுகிறதாம்.
 
இந்த ஒரு மோங்கே பழத்தின் விலை சுமார் 362 ரூபாய். சாதாரண வாழைப் பழத்தில் 18.3 கிராம் சர்க்கரை இருக்கும், ஆனால் மோங்கேயில் 24.8 கிராம் சர்க்கரை இருக்கிறது. மோங்கே வாழைப்பழத்தின் மீது பழுப்பு புள்ளிகள் வந்த பிறகுதான் இதனை சாப்பிட முடியுமாம். 
 
ஜப்பானின் மிக குளிர்ந்த பிரதேசத்தில் மோங்கே வாழைப்பழங்கள்  விளைவிக்கப்படுவதால், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இது விளைவிக்கப்படுகிறதாம்.