வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2016 (18:23 IST)

நாளை சிறியதாக தெரியும் நிலா: பச்சை நிறத்தில் தோன்றுமா?

15 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணில் நிகழும் அதிசய நிகழ்வான மினி மூன் என்று அழைக்கப்படும் சிறிய அளவில் நிலா தெரியும் நிகழ்வு நாளை நடக்கிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


 
 
அபோகீ என்று அறிவியலாளர்கள் இதனை அழைக்கின்றனர். அதாவது பூமியில் இருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 350 கிலோ மீட்டர் தொலைவில் நிலா நாளை செல்வதால் அது சிறிய அளவில் தெரியும். இந்த நிகழ்வு இன்று இரவு 9.35 மணியளவில் ஏற்படும்.
 
இந்நிலையில் இந்த நிலா பச்சை, பிங் போன்ற நிறங்களில் தெரியும் என இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்து கருத்து கூறிய கொல்கத்தா எம்.பி. பிர்லா பிளேனட்டோரியத்தின் இயக்குநர் தேவிபிரசாத் துவாரி வழக்கமான நிறத்திலேயே நில தெரியும் எனவும், வழக்கமான அளவை விட 14 சதவீதம் சிறிய அளவில் அது தெரியும் என கூறியுள்ளார்.
 
நாளைய நிகழ்வுக்கு பின்னர் இந்த அபூர்வ நிகழ்வு 2030-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி நடக்கும் என அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாளை காலை 10.55 மணிக்கே இந்த நிலா சிறிய அளவில் இருக்கும், பகலில் இது தெரியாது. ஆனால் இரவில் நிழல் போன்று இந்த மினி மூன் தெரியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.