வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (10:07 IST)

பூமியை விண்கல் தாக்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமியை விண்கல் தாக்கினால் கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


 

 
நாசா ஆய்வு மையம் சமீபத்தில், விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
 
அந்த விண்கல் 1 கிலோ மீட்டர் அகலமுடையது என்றும் மார்ச் மாதத்தின் போது நிலாவை விட 21 மடங்கு அருகில் பூமியை கடக்கக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், தேசிய வளிமண்டல ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த சார்லஸ் பார்தீன் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது அவர் கூறுகையில், "இந்த விண்கல் பூமியில் விழுந்தால் 15 கிலோ மீட்டர் அகலமுடைய பள்ளத்தை ஏற்படுத்தும்.
 
இதனால், வளிமண்டலத்தில் ஏராளமான தூசு ஏற்படும். ஒரு வேளை இந்த விண்கல் பாலைவனத்தில் விழாமல் வேறு ஏதேனும் இடத்தில் விழுந்தால் அதிகப்படியான தீப்பிழம்பை ஏற்படுத்தும்.
 
இதனால் ஏற்படும் புகை 10 ஆண்டுகள் வரை வானில் இருக்கக் கூடும். தூசுகள் மீண்டும் பூமியில் படிய 6 ஆண்டுகள் வரை ஆகலாம்.
 
அத்துடன், பூமியை அடையும் சூரிய ஒளியின் அளவு 20 சதவீதமாக குறையலாம். எனவே, பூமியின் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது.
 
இது பனியுகத்தின் வெப்பநிலைக்கு சமமானது. பூமியில் பெய்யும் மழையின் அளவு 50 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது"  என்று கூறியுள்ளார்.

விண்கல் பூமியைத் தாக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டாலும். விஞ்ஞானிகளின் விளக்கங்கள் அச்சமூட்டுவதாக உள்ளது என்பது குறிப்பிடுகிறது.