1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (13:58 IST)

2.5 மில்லியன் மைல் வேகத்தில் சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல்

மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில், சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில் சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பெர்ஜர் கூறியுள்ளார். 
 
இதனால் தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது.
 
பொதுவாக சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதல்ல. ஆனால் இம்முறை, சூரியனில் பெரும் காந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
 
அதன் திசை பூமியை நோக்கி நேராக உள்ளது. மேலும், இதன் ஆற்றல் மிக்க காந்த சக்தியினால் பூமியின் காந்தப் புலத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம்.
 
இதன் காரணமாக மின்சார அமைப்புகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பெர்ஜர் கூறியுள்ளார்.