வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (05:51 IST)

உலகிலேயே முதன் முறையாக ரோபோக்களுக்கு திருமணம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகிலேயே முதன் முறையாக ரோபோக்களுக்கு திருமணம் நடைபெற்றுது.
 

 
மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபாவுக்களில், ஆண் ரோபோவுக்குப் புரோயிஸ் என்றும், பெண் ரோபோவுக்கு யுகிரின் என்று பெயர்.
 
ஆண் ரோபோ அளவில் பெரியதாக எந்திர மனித உருவிலும், பெண் ரோபோ ஜப்பான் பொம்மை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண் ரோபோவுக்கு, உலகில் உள்ள மணப்பெண் போலவே பக்காவாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, இரு ரோபோவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் இரு ரோபோக்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்ட கொண்டது.
 
இதனை ஜப்பான் முறைப்படி கொண்டாடும் வகையில், கேக் வெட்டி, ஆடல், பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடப்பட்டது.