1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 27 மே 2017 (06:53 IST)

மான்செஸ்டர் கொலையாளி கல்விக்கடன் பெற்றவனா? அதிர்ச்சி தகவல்

கடந்த திங்கள் அன்று இங்கிலாந்து நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய சம்பவம் மான்சென்ஸ்டர் தாக்குதல். சல்மான் அபேடி என்ற தீவிரவாதி மனித வெடிகுண்டாக செயல்பட்டு நடத்திய இந்த தாக்குதலால் 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்



 


இந்த சம்பவம் குறித்து இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சல்மான் அபேடியின் சகோதரரும் அடங்குவார். இந்த நிலையில் சல்மான் அபேடி இங்கிலாந்தில் உள்ள சால்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது 7000 பவுண்டுகள் வங்கியில் கல்விக்கடன் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இங்கிலாந்தில் கல்விக்கடன் பெற்று, படித்து, இங்கிலாந்துக்கே உலை வைத்துள்ளான் என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சல்மான் அபேடியிடம் ஏராளமான பணம் புழங்கியதாகவும், தீவிரவாத இயக்கங்கள் அவனுக்கு பண உதவி செய்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் படிக்கும்போது மூன்று வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அறை எடுத்து தங்கியுள்ளதாகவும், ஒரு மாணவன் தங்குவதற்கு மூன்று அறைகள் எதற்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.