வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (12:14 IST)

பேஸ்புக்கில் நிர்வாண படங்களை அனுப்பி மிரட்டும் ஆசாமி!

பேஸ்புக்கில் நிர்வாண படங்களை அனுப்பி மிரட்டும் ஆசாமி!

பேஸ்புக்கில் நண்பராக அறிமுகமான ஒருவர் என்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக மலேசியாவில் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த ஆசாமியை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


 
 
மலேசியாவில் டேவிட் லியாங் என்பவர் பேஸ்புக்கில் இருந்தபோது லீ என்ற பெயரில் ஒருவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அவர் சில நிமிடம் டேவிட் லியாங்குடன் சாட் செய்து பின்னர் வீடியோ காலில் அழைத்துள்ளார்.
 
வீடியோ காலில் அழைத்த லீ தனது உடைகள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டு, நிர்வாணமாக நின்று, டேவிட் லியாங்கையும் நிர்வாணமாக நிற்க வற்புறுத்தியுள்ளார். வேறு வழியின்றி லியாங்கும் நிர்வாணமாக நின்றுள்ளார்.
 
காலை கட் செய்த பின்னர் லீ, லியாங்கின் நிர்வாண புகைப்படங்களை தொகுத்து அவருக்கு அனுப்பி வைத்து உடனடியாக கேட்கும் பணத்தை தரவேண்டும். இல்லையென்றால் இந்த புகைப்படங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த லியாங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது என்றும் தன்னை மிரட்டும் அந்த ஆசாமி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். போலிசார் அந்த மோசடி நபரை தேடி வருகின்றனர்.