1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூன் 2015 (17:38 IST)

6000 பேரை பணிநீக்க மலேஷியன் ஏர்லைன்ஸ் முடிவு

கடந்த ஆண்டு இரண்டு விமானங்களை இழந்துள்ள மலேசியன் ஏர்லைன்ஸ், அதன் ஆறாயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

இந்தச் செய்தியை அறிவித்த நிறுவனத்தின் ஜெர்மனிய தலைமை நிர்வாகி, நிறுவனம் சட்டரீதியாக திவாலாகிவிட்டதாக கூறினார்.
 
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கிப் பறந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று, காணாமற் போனது. அந்த விமானம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
 
அதற்கடுத்து நான்கு மாதங்கள் கழித்து, யுக்ரேன் வான்பரப்பில் வைத்து மற்றொரு விமானம், சந்தேகிக்கப்படும் ஏவுகணைத் தாக்குதல் ஒன்றின் மூலம் தாக்கியழிக்கப்பட்டது.
 
விமான நிறுவனத்தின் தற்போதைய நிதி பிரச்சினைகளுக்கு, திறமையற்ற நிர்வாகமும் காரணம் என, அவதானிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.