1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (23:29 IST)

உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி! மீண்டும் இலங்கை அதிபர் ஆவாரா?

இலங்கையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ராஜபக்சேவின்  ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தவர் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே. இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.

ஆனால் நேற்று நடைபெற்ற இலங்கை உள்ளாட்சி தேர்தலில் அவருடைய கட்சிக்கு சாதகமான முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி 51 இடங்களிலும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 10 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வெற்றியை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ராஜபக்சேவின் கட்சி வெற்றி பெற்று மீண்டும் அவர் அதிபர் ஆவார் என்று அந்நாட்டு ஊடகங்கள் கணித்து வருகின்றன.