1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (20:13 IST)

'திரையுலகில் பரபரப்பு' - இந்திய நடிகர்களை பழிவாங்கும் பாகிஸ்தான்!

இந்திய கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளப்படம் எம்.எஸ்.தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி.


 
 
இந்தப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 
 
இதற்கிடையே,  ஜம்மு காஸ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தான் தீவிரவதிகள், தாக்குதல் நடத்தியதில், 18 இந்திய ராணுவ வீரர்கள் உரிழந்தனர். இதனால், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர், பாகிஸ்தான் நடிகர்களை இந்திய நாட்டைவிட்டு வெளியேறுமாறு மிரட்டல் விடுத்தனர்.
 
அதனால், இந்தியர்களை பழிவாங்கும் விதமாக, இந்தியர்கள் நடித்த, எம்.எஸ்.தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி படத்தை, பாகிஸ்தானில் வெளியிட அந்நாட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் தடை விதித்துள்ளனர்.