வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 2 மார்ச் 2015 (15:35 IST)

கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்

அமெரிக்காவில், கன்னியாஸ்திரி முகாம் நடத்தி 'நான் கடவுளின் மனிதன்'  என்று கூறி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறவான பாதிரியாரை காவல்துறையினர் பிரேசிலில் கைது செய்தனர்.
 
அமெரிக்காவின் மின்னியபொலிஸ் அருகே உள்ளது ஃபின்லேசன் பகுதி. இங்கு கிறிஸ்துவ மத தொண்டூழியம் செய்யவரும் இளம் பெண்களுக்கான கன்னியாஸ்திரி முகாமை பாதிரியாரான விக்டர் அர்டன் பெர்ணார்ட் என்பவர் நடத்தி வந்தார்.
 
53 வயதுடைய அவர், அந்த முகாமில் பயிற்சிக்காக வந்த ஒரு சிறுமியை 13 வயதில் இருந்து சுமார் 10 ஆண்டுகள் வரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார்கள் எழுந்தன.
 
இதேபோல், அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண், தன்னையும் அவர் 12 வயது முதல் 20 வயது வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
 
'நான் கடவுளின் மனிதன் என்னுடன் நெருக்கமாக இருந்தால் உங்களின் கன்னித்தன்மைக்கு பாதிப்பு வராது' என்று கூறி அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அந்தப் பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
 
மேலும், அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கத் தயங்கி வந்ததகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விக்டர் அர்டன் பெர்ணார்ட் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென தலைமறைவானார். அவரை அமெரிக்க காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
 
மேலும், அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்த அவரை பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 2,100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரையாடா பிப்பா கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் பிரேசில் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அவருடன் சுமார் 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், பென்டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
இதைத் தொடர்நது, அவர்கள் விரைவில் அமெரிக்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடவுளின் பெயரால் ஒரு பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.