1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 9 டிசம்பர் 2014 (13:15 IST)

உயிரியல் பூங்காவில் பார்வையாளரை கடித்துக் குதறிய சிங்கங்கள் (வீடியோ )

ஸ்பெயினில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கங்களின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டு இருந்த அகழிக்குள், 45 வயதுடைய ஜஸ்டோ ஜோஸ் என்பவர் குதித்துள்ளார். ராணுவ உடையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டு இருந்த பகுதிக்குள் சென்ற அவரை ஒருசிங்கம் பலமாக தாக்கி தூக்கி எறிந்தது.

 
சிங்கங்கள் தாக்குவதற்கு முன்னதாக ஜோஸ் சுவரின் ஒருபகுதியை பிடித்து மேலே ஏற முயன்றுள்ளார். ஆனால் அவரை சிங்கங்கள் விடவில்லை. சிங்கம் ஒன்று அவரை குழிக்குள் தள்ளி தாக்கியது. உடனடியாக மீட்பு குழுவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிங்கத்தின் மீது தண்ணீரை பீய்ச்சு அடித்தனர். சிங்கங்கள் அவரை கொன்றுவிடாத வண்ணம் தொடர்ந்து சமாளித்து வந்தனர். ஜோஸ் தலை குப்புற படுத்துக் கொண்டார்.

 
அரை மணிநேரம் நடைபெற்ற போராட்டத்தில் அவர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். ஜோஸ் சிங்கங்களின் தாக்குதலால் ஏற்பட்ட பலத்தக் காயங்களுடன் மீட்டு, மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தற்போது அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
 
ஜோஸில் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஸ்பெயின் தகவல்களின்படி, ஜோஸ், சிங்கங்கள் அடைக்கப்பட்டு இருந்த அகழியின் வேலியை தாண்டி சென்றதை சுற்றுலாப் பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே சிங்கங்கள் அவருடன் விளையாட முயற்சி செய்ததா என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிங்கங்கள் அவரை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்றும் அவருடன் விளையாட முயற்சி செய்தது என்றும் கூறப்படுகிறது.