1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2016 (19:51 IST)

நைஜீரியாவை அச்சுறுத்தும் லாசா காய்ச்சல்: 101 பேர் பலி

நைஜீரியா நாட்டில் லாசா என்னும் கடும் காய்ச்சல் அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காயச்சலுக்கு நைஜீரியாவில் 101 பேர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
இந்த லாசா காய்ச்சலால் நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை 175 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 101 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு தேசிய நோய்த்தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
 
நைஜீரியா தேசிய நோய்த்தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் 19 மாநிலங்களில் இந்த லாசா நோய் பாதிப்புகள் உள்ளதாகவும். அந்த நோயாளிகள் கண்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னர் 2012-இல் இந்த லாசா நோயால் 112 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் முதன் முதலாக 1969 ஆண்டு நைஜீரியா நாட்டில் லாசா நகரில் கண்டுபிடிக்கப்பட்டது, அதனால் இதற்கு லாசா காய்ச்சல் என பெயர் வைத்துள்ளனர். லாசா காய்ச்சல் ஒரு வைரஸ் காய்ச்சலாகும்.