வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By bharathi
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (12:31 IST)

ஆபாச புகைப்படம் அனுப்பியதால் பணி இழந்த இளைஞர்

அமெரிக்காவில் தன்னை பணியில் சேர்த்த பெண் மனித வள மேம்பாட்டு அதிகாரிக்கு இளைஞர் ஒருவர் ஆபாச புகைப்படம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலை ஒன்று சமீபத்தில் நேர்முகத்தை தேர்வை நடத்தியது. பெண் மனித வள மேம்பாட்டு அதிகாரி தலைமையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 23 வயதான இளைஞர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். பணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிவிப்பு அந்த இளைஞருக்கு பெண் மனித வள மேம்பாட்டு அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு பணி கிடைத்து விட்டது என்ற பேரானந்தத்தில் திக்கு முக்காடிய  அந்த இளைஞர்,  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது ஆபாச படத்தை தனது நண்பர்களுக்கு அனுப்ப திட்டமிட்டார்.

அதன்படி  செல்போனில் தனது ஆணுறுப்பை புகைப்படம் எடுத்த அந்த இளைஞர், அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பவதற்கு பதிலாக தன்னை பணியில் சேர்த்த பெண் மனித வள மேம்பாட்டு அதிகாரிக்கு தவறுதலாக அனுப்பியுள்ளார். தனது நண்பரிடம் இருந்து எந்தவித பதில் தகவலும் வராததால் அதே எண்ணுக்கு மீண்டும் மீண்டும் ஆபாச புகைப்படத்தை அனுப்பியுள்ளார். தவறுதலாக இந்த புகைப்படம் அனுப்பப்பட்டதை அந்த பெண் அதிகாரி ஆரம்பத்தில் புரிந்து கொண்டார். இருப்பினும் தொடர்ந்து அந்த ஆபாச புகைப்படங்கள் வரவே ஆவேசமடைந்த அவர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் தவறுதலாக புகைப்படம் அனுப்பியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும் அந்த இளைஞருக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை அந்த பெண் அதிகாரி திரும்ப பெற்றுக் கொண்டார்.