Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்காவை பின்பற்றும் குவைத்: விசா வழங்க மறுப்பு!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:42 IST)
பாகிஸ்தான், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கு விசா வழங்கப்படாது என்று குவைத் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

 
 
அண்மையில், தீவிரவாதத்தை தடுக்கும் வகையில், அமெரிக்கா வரும் ஈரான், ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட முஸ்லீம் நாட்டு அகதிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக,அறிவித்தது.
 
இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது குவைத் நாடும் அத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் லிபியா ஆகிய 5 நாட்டு மக்களுக்கு, விசா வழங்கப்படாது என குவைத் கூறியுள்ளது. தீவிரவாதிகளுக்கு ஒருபோதும் குவைத் மண்ணில் இடம் இல்லை என்றும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
 
குவைத் அரசின் இந்த அதிரடிச் செயல், கடந்த 1990களில் நடைபெற்ற வளைகுடா போர்க்காலத்தை நினைவுபடுத்துவதைப் போன்றுள்ளதாக, அரசியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :