வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (16:06 IST)

பஜார்களில் ஏகே 47 துப்பாக்கியை வாங்கும் மக்கள்

ஈராக்கில் உள்ள குர்தீஷ் பகுதியில் உள்ள பஜார்களில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் 700 டாலர்களுக்கு விற்கப்படுகிறது.
வடக்கு ஈராக்கின் குர்தீஷ் பகுதியில் தீவிரவாத தாக்குதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வெவ்வேறு ரக துப்பாக்கிகளை வாங்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் குறிப்பாக ஏகே 47 ரக துப்பாக்கிகளை அதிக மக்கள் வாங்குவதாகவும், அந்த ரக துப்பாக்கி இரு ஆண்டுகளுக்கு முன் 300 டாலருக்கு விற்கப்பட்டதாகவும், தற்போது அது 700 டாலர்களுக்கும், கைத்துப்பாக்கிகள் 1200 டாலர்களுக்கும், எம்-16 ரக துப்பாக்கிகள் 3000 டாலர்கள் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
துப்பாக்கிகள் மட்டும் அல்லாமல் கத்தி வகைகளுக்கும் அதிக தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.