திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (20:10 IST)

கொரியா கிராண்ட்மா: யூ டியூப்பில் கலக்கும் 70 வயது பாட்டி!!

தென் கொரியாவை சேர்ந்த 70 வயது மதிக்கதக்க பாட்டி ஒருவர் தற்போது யூடியூப்பை கலக்கி வருகிறார். இவருக்கு மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். 


 
 
ஜனவரி மாதம் முதல், ‘கொரிய கிராண்ட்மா’ என்ற பெயரில் அழகுக் குறிப்புகளை கற்றுக்கொடுத்து வருகிறார். இந்த பாட்டி, எங்கு செல்லும் போது எப்படி மேக் அப் போட வேண்டும் எவ்வாறு போட வேண்டும் போன்ற குறிப்புகைளை நகைச்சுவையாக அளித்து வருகிறார்.
 
70 வயதில் வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்த எனக்கு வாழ்க்கை இதற்கு மேலும் உள்ளது என என் பேத்திதான் யூ டியூப்பில் இந்த மாதிரி கலக்குவதற்கு ஊக்கமளித்தார் என தெரிவித்துள்ளார் அந்த பாட்டி.