1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (20:15 IST)

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த பிரபல கிக்பாக்ஸிங் சாம்பியன் மரணம்

தாய்லாந்தை சேர்ந்தவர் வால்டெட் காஷி 2 முறை உலக கிக்பாக்ஸிங் சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் ஜெர்மனியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேருவதற்காக சிரியா சென்றார். சிரியாவில் அவர் மரணம் அடைந்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

 
காஷி அல்பேனிய வம்சாவளியை சேர்ந்த ஒரு ஜெர்மன்காரர் ஆவார். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை விட்டு விட்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து போரிட சிரியா சென்றார்.
 
இந்த நிலையில் காஷியின் குடும்பத்தினர் காஷி கடந்த சனிக்கிழமை கொல்லபட்டதாக தெரிவித்துள்ளதாக சுவிஸ் டெலிவிஷன் ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து தெளிவான தகவல் இல்லை.
 
காஷியுடன் தீவிரவாத நிபுணர் சாமுவேல் அல்தாப் வாட்ஸ்அப் மூலம் காஷியுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஆனால் திடீர் என அவரது வாட்ஸ்அப் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் டிவி தெரிவித்துள்ளது.
 
காஷி தன்னுடன் மற்ற 3 கிக்பாக்ஸர்களுடன் சென்று சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.