வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2015 (19:10 IST)

ஹெலிகாப்டர் மூலம் 3000 சாண்ட்விச்சுகளை இலவசமாக வழங்கிய கே.எஃப்.சி.

கே.எஃப்.சி. நிறுவனம் கடற்கரைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட 3000 சாண்ட்விச்சுகளை இலவசமாக வழங்கியது.
 
உலகம் முழுவதும் கே.எஃப்.சி. நிறுவனம் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகிறது. இந்நிலையில் புதிய விளம்பர யுக்திக்காக நேற்று வெள்ளிக்கிழமை [17.04.15] அன்று பிற்பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த வேளையில் கடற்கரை பகுதிக்கு ஒரு ஹெலிகாப்டர் வந்தது.
 

 
அந்த ஹெலிகாப்டர் ஒரு ராட்சத பக்கெட்டையும் சுமந்து வந்தது. அந்த பக்கெட்டை ஹெலிகாப்டர் மெதுவாக தரையிறக்கியது. பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கிவந்த கே.எப்.சி. ஊழியர்கள் பக்கெட்டினுள் வைத்திருந்த சுமார் 3 ஆயிரம் சிக்கன் ஸாண்ட்விச்களை அங்கு கூடியிருந்தவர்களுக்கு இலவசமாக வழங்கினர்.
 
கே.எஃப்.சி. நிறுவனம் எங்கேயும், எப்போதும் தரமான வகையில் உணவுகளை கொண்டுவந்து சேர்க்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு நிரூபணம் செய்யும் வகையில் இந்த இலவச சேவை நிகழத்தப்பட்டுள்ளது.