மோடி, ட்ரம்ப் என அனைவரையும் வீழ்த்திய பாப் பாடகி


Abimukatheesh| Last Updated: சனி, 17 ஜூன் 2017 (16:29 IST)
சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி, டொனால்டு ட்ரம்ப் என அனைத்து பிரபலங்களையும் விட பாப் பாடகி கெட்டி பெர்ரி 100 மில்லியன் பேர் பின்தொடரும் நபராக உள்ளார்.

 

 
அமெரிக்க பாப் பாடகி கெட்டி பெர்ரி உலம் முழுவதும் பிரபலமானவர். தற்போதைய பாப் பாடல் உலகில் முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளமான ட்விட்டரில் அனைத்து பிரபலங்களும் தங்களுக்கென கணக்கு வைத்துள்ளனர். அவர்களது ரசிகர்கள் அவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். 
 
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்தும் பிரபலங்கள் அவர்களது ரசிகர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் 100 மில்லியன் ரசிகர்கள் பின்தொடரும் முதல் நபர் என்ற பெருமையை கெட்டி பெர்ரி பெற்றுள்ளார்.
 
இதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டரம்ப் முதலிடத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் இடத்தில் இருந்தார். தற்போது அவர்கள் அனைவரையும் பிக்ன்னுக்கு தள்ளி கெட்டி பெர்ரி முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :