1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Lenin
Last Modified: திங்கள், 13 அக்டோபர் 2014 (19:27 IST)

ழான் டிரோலுக்கு பொருளாதார அறிவியலுக்கு நோபல் பரிசு

2014 ஆம் ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ழான் டிரோலுக்கு  வழங்கப்பட்டுள்ளது.
 
2014ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், விஞ்ஞானம், உலக அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டள்ளது. இந்த பரிசு பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ழான் டிரோலுக்கு  வழங்கப்பட்டுள்ளது.
 
 
61 வயதாகும் டிரோல்,  'சக்திவாய்ந்த நிறுவனங்கள் கோலோச்சும் இன்றைய பொருளாதாரக் காலக்கட்டத்தில் தொழிற்துறையை ஒழுங்கமைத்தல் பற்றிய இவரது ஆய்வுப் பங்களிப்பு அபரிமிதமானது' என்று நோபல் அகாடமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது, அல்லது மிகப்பெரிய தனியார் வணிக நிறுவனங்கள் சந்தையில் போட்டியின் விளைவினால் புதிய நிறுவனங்கள் உள் நுழைந்து தங்களது சந்தை ஆதிக்கத்தை குறைக்கும் விளைவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை, அரசாங்கம் எவ்வாறு கட்டுப்படுத்தி ஒழுங்குமுறை செய்ய வேண்டும் என்பது பற்றி கொள்கை முடிவுகளை இவரது ஆய்வுகள் விளக்கியுள்ளன.