புனித மலை மீது நிர்வாண போஸ் கொடுத்த மாடல் அழகி


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 19 மே 2017 (21:05 IST)
பிரபல ஃப்ளே பாய் மாடல் அழகி ஜெய்லின் குக் புனிதமாக கருதப்படும் மலை மீது ஏறியதோடு நிர்வாண போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

 
பிரபல ஃப்ளே பாய் மாடல் அழகி தனது காதலுடன் சுற்றுப்பயணத்தில் உள்ளார். நியூசிலாந்தில் உள்ள தரானாகி மலை மீது ஏறி நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தற்போது அவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 
மாவேரி இன மக்கள் தரானாகி மலையை தங்கள் மூதாதையர் என கருதி புனிதமாக போற்றி வருகின்றனர். அந்த மலை மீது அவர்கள் ஏறுவதில்லை. மக்கள் ஏறினால் அதை தடுப்பது இல்லை. ஆனால் புனிதமாக கருதப்படும் மலை மீது ஏறி நிர்வாண புகைப்படம் எடுத்து வெளியிட்டதை அவமானப்படுத்தியதாக கருதுகிறார்கள்.
 
இதுகுறித்து ஜெய்லின் குக், நிர்வாணமாக இருப்பது குற்றமல்ல. இது இயற்கை; தூய்மையானது. நிர்வாணமாக இருப்பது சுதந்திரம் மற்றும் உரிமையை குறிப்பது, என்று தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :