வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (13:16 IST)

2ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட மிகப் பெரிய போர் கப்பல் கண்டுபிடிப்பு [வீடியோ]

2ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய போர் கப்பலான முசஹி கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

 
ஜப்பான் 2ஆம் உலகப்போரின் போது முசசி என்ற போர்கப்பலை பயன்படுத்தி வந்தது. அப்போது இந்த கப்பல் தான் உலகிலேயே பெரிய போர்கப்பலாக இருந்தது. இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டதாகவும் இருந்தது.
 

 
இந்நிலையில் 1944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி அந்த கப்பல் பிலிப்பைன்ஸ் நாடு அருகே சென்று கொண்டிருந்தது. இதனைக் கண்டுபிடித்த அமெரிக்க விமான படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்கினார்கள். இதில் முசஹி கப்பல் மூழ்கியதோடு மட்டுமல்லாமல், அதில் இருந்த ஆயிரம் வீரர்களும் உயிரிழந்தனர்.
 

 
இந்த கப்பலை கண்டுபிடிக்க அமெரிக்காவின் புதைபொருள் ஆய்வு நிறுவனம் ஒன்று தானியங்கி வாகனங்கள் மூலம் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அதில் கப்பல் கடலுக்கு அடியில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

 
முசஹி கப்பல் சிபுயன் கடல் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் (3,280 அடி) ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வீடியோ கீழே: