1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 29 மார்ச் 2015 (15:31 IST)

800 மீட்டர் உயரத்தில், 1 இஞ்ச் கயிற்றில் காரை ஓட்டி சாதனை [வீடியோ]

ஓட்டுநர் ஒருவர் 800 மீட்டர் உயரத்தில் 1 இஞ்ச் கயிற்றில் நவீர ஜாக்குவார் காரை ஓட்டி சாதனைப் படைத்துள்ளார்.
 

 
உலகப்புகழ் பெற்ற கருடா நிறுவனம் புதிய 2016 XF ரக கார்களை தயாரித்துள்ளது. இந்த காரில் சக்கரத்திற்கு உள்ள இடைவெளி 521 மிமீ ஆகும்.


 

மேலும் இந்த காரில் 163 குதிரை திறன் கொண்ட ஒரு என்ஞ்சினும், 180 குதிரைத் திறன் கொண்ட மற்றொரு எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது.
 

 
இந்த இரண்டு என்சினும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உடல் பகுதி முழுவதும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
 

 
மேலும் அடுத்தப் பக்கம்...

 


இந்த காரின் அறிமுக விழாவிற்கு விநோதமான, அதே சமயம் சிலிர்ப்பூட்டும் ஒரு சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதற்காக லண்டன் நகரில் ராயல் டாக் துறைமுகம் பகுதியில் தேம்ஸ் நதியின் மேல், 800 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட 1 இஞ்ச் கனமுள்ள கயிற்றின் மீது செல்லும் சாகச நிகழ்ச்சியை நடத்தியது.
 

 
இது குறித்து இந்த சாகசத்தை செய்த ஜிம் டோவ்டெல், “நீர்நிலைக்கு மேலே மிக மெல்லிய கயிற்றின்மீது நாலாபக்கமும் சுழன்றடிக்கும் காற்றின் போக்குக்கு ஈடு கொடுத்து இந்த சாகசத்தை நடத்துவது மிகவும் சவாலான விஷயம் என்றே எனக்கு தோன்றியது.


 

ஆனாலும், இந்த சாகசத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற எனக்குத் தோன்றியது” என்று கூறுயுள்ளார்.
 



வீடியோ கீழே: