வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 19 பிப்ரவரி 2015 (16:23 IST)

கப்பலுடன் கடலில் மூழ்கிக் கிடந்த, ஏராளமான தங்க நாணயங்கள்

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஒரு துறைமுகத்திற்கு அருகில், மூழ்கிக்கிடந்த கப்பலில் ஏராளமான தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இஸ்ரேல் நாட்டில் செசெரியா என்ற இடத்தில் பழமை வாய்ந்த துறைமுகம் ஒன்று உள்ளது.
 
இந்த துறைமுகத்திற்கு அருகே 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கியதாகக் கருதப்படம் கப்பல் ஒன்றை புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 
 
அந்த கப்பலுக்குள் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்ததை, அவர்கள் கண்டுபிடித்தனர். அதிலிருந்து இதுவரை 9 கிலோ தங்க நாணயங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
 
மேலும், ஏராளமான நாணயங்கள் அந்த் கப்பலில் இருக்கலாம் என்று கருதப்படுவதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
 
1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பாதிவித் கலிபக் என்ற மன்னன் அரபுநாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றை ஆட்சி செய்து வந்தார். அவர் காலத்தில் எகிப்து நாட்டிலிருந்து செசெரியா துறைமுகத்துக்கு கப்பலில் இந்த தங்க நாணயம் கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
 
அப்போது அந்தக் கப்பல் கடலில் மூழ்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த தங்க நாணயங்கள் அனைத்தும் இஸ்ரேல் அரசுக்குதான் சொந்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.