இஸ்ரேல், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ரகசிய பேச்சு வார்த்தை


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 12 ஜூன் 2015 (19:16 IST)
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகளுடன், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
 
 
கடந்த வாரத்தில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் இயக்குநர் ஜான் பிரென்னன், இஸ்ரேலுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத்தின் தலைவர் தமிர் பார்டோவையும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
 
அணுசக்தி ஒப்பந்தம், சிரியா பிரச்சனையில் ஈரானின் பங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி அவர்கள் விவாதித்துள்ளனர். ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஜூன் 30 ஆம் தேதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :