பெண்கள் உட்பட 400 பேரை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்


Suresh| Last Modified திங்கள், 18 ஜனவரி 2016 (08:44 IST)
சிரியாவில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 400 பேரை துப்பாக்கி முனையில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

 

 
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சிரியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடைபெற்று வருகின்றது.
 
இந்நிலையில், பக்னலியா நகரத்தில் இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 400 பேரை துப்பாக்கி முனையில் ஐஎஸ் தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச் சென்றனர்.
 
கடத்தப்பட்ட அனைவரும் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :