வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 30 ஜூலை 2015 (04:05 IST)

ராமன் மகசேசே விருதுகளுக்கு 2 இந்தியர்கள் உட்பட 5 பேர் தேர்வு

புகழ் பெற்ற ராமன் மகசேசே விருதுகளுக்கு 2 இந்தியர்கள் உட்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 

 
ராமன் மகசேசே விருது ஆசியாவின் நோபல் பரிசு என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாக, கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் ராமன் மகசேசே விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
 
இந்த ஆண்டு, எய்ம்ஸ் முன்னாள் முதன்மை ஊழல் தடுப்பு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதிக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்படுகிறது.
 
அதே போன்று, கூஞ்ச் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அன்ஷு குப்தாவிற்கு, இவ்விருது வழங்கி கௌரவிகப்படுகிறது.
 
மேலும், இந்த விருதுக்கு, லாவோசின் கொம்மலி, மியான்மரின் கியான் தூ, பிலிப்பைன்சின் பெர்ணாண்டோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.