வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (11:15 IST)

துபாயில் நிறுவனம் நடத்தி மோசடி: இந்தியர்களுக்கு 517 ஆண்டு சிறை

துபாயில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த இரண்டு இந்தியர்களுக்கு 517 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
 
கோவா மாநிலத்தை சேர்ந்த சிட்னி லமன்ஸ் மற்றும் ரேயான் டிசவ்சா ஆகிய இருவரும்
துபாயில் பணப்பரிவர்த்தனை நிறுவனத்தை தொடங்கி, முதலீடு செய்யும் பணத்திற்கு 120 சதவீதம் லாபம் தருகிறோம் எனக்கூறி ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
 
இந்த அறிவிப்பை கேட்ட அந்நாட்டு மக்கள் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். முதலில் அந்த நிறுவனம் திட்டத்தில் கூறியபடு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வந்தது. நாளடைவில் அவர்கள் மக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனர்.
 
இதனால் அந்த நிறுவனத்தால் ஏமாற்றபட்டவர்கள் துபாய் போலீசிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, சிட்னி லமன்ஸ் மற்றும் ரேயான் டிசவ்சா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த துபாய் நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் 517 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.