ஆஸ்திரேலியா செல்ல இனி ஆன்லைனில் விசா!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (16:26 IST)
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஆன்லைன் மூலமாகவும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

 
 
புத்தாண்டு துவங்கிய இந்த நான்கு மாதங்களில் ஆஸ்திரேலியா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 65,000மாக உயர்ந்துள்ளது. எனவே, இதனை ஊக்குவிக்க இந்தியர்களுக்கு ஆன்லைனில் விசா விண்ணபிக்கும் எளிய வழியை ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ளது.
 
இது வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பயணமாகவும், தொழில் ரீதியாகவும் வர விரும்பும் இந்தியர்களுக்காகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :