அமெரிக்காவில் ஐதராபாத் மாணவர் சுட்டுக் கொலை

K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 16 ஜூன் 2015 (22:09 IST)
மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஐதராபாத் மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சாய் கிரண், கீதாஞ்சலி பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்தார்.

எம்.எஸ். படிப்பதற்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்தார். அங்கு அவருக்கு படிக்க இடம் கிடைத்தது. இதனையடுத்து, மே 2ஆம் தேதி ஐதாபாத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், சாய் கிரண் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சாய் கிரண் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-

சாய் கிரண் சம்பவத்தன்று முதலில் ஷாப்பிங் சென்றுள்ளார். பின்பு,
கல்லூரி விடுதிக்கு திரும்பியுள்ளார்.
அப்போது, தனது நண்பர்களுடன் போனில் பேசியுள்ளார்.
அந்த நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அவரது விலை உயர்ந்த செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதை சாய் கிரண் தத்துள்ளார். இந்த மோதலில், சாய் கிரண் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து புளோரிடா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவனின் உடலை ஐதராபாத் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என மாணவர் சாய் கிரணின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு செல்போனுக்காக இந்திய இளைஞர் அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :