அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்: பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்க அமெரிக்கா முடிவு


Caston| Last Modified சனி, 13 பிப்ரவரி 2016 (13:34 IST)
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் ரிச்சார்ட் வெர்மா-வுக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

 
 
வெளியுறவுச் செயலாளார் எஸ் ஜெயஷங்கர், அமெரிக்க தூதர் வெர்மாவுக்கு அனுப்பிய அந்த சம்மனில் அமெரிக்காவின் இந்த முடிவு, அமெரிக்காவின் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது என்றார்.
 
வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் தங்களின் உறுதியான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிச்தானின் நடவடிக்கைகளை ஆதரிப்பதை போல் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
 
பாகிஸ்தானுக்கு 18 புதிய எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிப்பதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மிகவும் கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய பின்னணியில், பாகிஸ்தானுக்கு புதிய எப்-16 ரக போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த போர் விமானங்கள் அடுத்த வருட இறுதியில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :