வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 11 மார்ச் 2017 (00:07 IST)

தொலைந்து போன சந்திராயன் 1 விண்கலத்தை கண்டுபிடித்த நாசா

இந்திய விண்வெளி துறையின் சாதனைகளில் ஒன்று நிலவுக்கு அனுப்பப்பட சந்திராயன் என்ற விண்கலம். கடந்த 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்ட இந்த விண்கலம் திடீரென 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் தொடர்பில்லாலம் காணாமல் போய்விட்டது.


 


இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து சந்திராயன் 1 பத்திரமாக நிலவை சுற்றிக் கொண்டிருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது. ஆனாலும் இந்த விண்கலத்தை பூமியில் இருந்து தொடர்பு கொள்ள முடியாது என்பதால் உபயோகம் அற்றதாக கருதப்படுகிறது

இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் நிலவுக்கு சந்திராயன் 2 என்ற விண்கலத்தை வரும் 2018ஆம் ஆண்டு செலுத்த உள்ளனர்.