வைரஸை ஏவி விட்டு சம்பாதித்தது இவ்வளவு தானா: வான்னாக்ரை ஹேக்கிங் குழு கணக்கில் உள்ள பணத்தொகை!!


Sugapriya Prakash| Last Modified சனி, 20 மே 2017 (10:53 IST)
வான்னாக்ரை ஹேக்கிங் குழு இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை கம்ப்யூட்டருக்கு அனுப்பி, கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து வந்தது.

 
 
கேட்டும் பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்கள் திரும்ப தரப்படும், இல்லையெனில் அந்த தகவல்கல் அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
இந்த ரான்சம்வேர் வைரஸின் தாக்குதலுக்கு உலக முழுவதுமுள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் தப்பவில்லை.
 
இதன் மூலம் வான்னாக்ரை ஹேக்கிங் குழு சம்பாதித்தது எவ்வளவு பணம்? என்பது குறித்த தகவலை பிரிட்டனை சேர்ந்த எல்லிப்டிக் என்ற மென்பொருள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
அதில், 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், வான்னாக்ரை குழுவினர் பெரும் தொகையை வேறு கணக்கிற்கு மாற்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :