Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போலி செய்தியை நம்பி ராணுவ மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அமைச்சர்


Abimukatheesh| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:20 IST)
இணையதளத்தில் வெளியான போலி செய்தியை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், இஸ்ரேலுக்கு ராணுவ மிரட்டல் விடுத்துள்ளார்.

 

 
பாகிஸ்தான் நாட்டில் உள்ள இணையதளம் ஒன்றில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக போலி தலைப்புச் செய்தி ஒன்று வெளியானது. அதில், எந்த ஒரு முன் அனுமானத்திலும் சிரியாவுக்கு பாகிஸ்தான் தனது தரைப்படைகளை அனுப்பினால், நாங்கள் பாகிஸ்தான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தி அழிப்போம், என்று எழுதப்பட்டு இருந்தது.
 
மேலும் அதில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பெயர் தவறாக வெளியாகியுள்ளது. இந்த போலி செய்தியை உண்மை செய்தி என்று நினைத்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் ஆவேசமடைத்துவிடார். 
 
இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடு என்பதை இஸ்ரேல் மறந்து விட்டது என்று பதிவிட்டார். இதையடுத்து இத்தகைய செய்தியை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பதில் அளிக்கவில்லை.
 
இதனால் டுவிட்டரில் பகுதியில் அவரது ஆவேசமான கருத்துக்கு கிண்டல் செய்து வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :