வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2014 (13:13 IST)

மத அவமதிப்பு வழக்கு: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கிற்கு 26 ஆண்டுகள் சிறை

மதத்தை அவமதிப்பு செய்யும் வகையில் நடனமாடிய வழக்கில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட நால்வருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை வீணா மாலிக்கிற்கும், தொழில் அதிபர் ஆசாத் பஷீர் என்பவருக்கும்  கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. அந்த திருமண உபசரிப்பு விழாவில் ஒரு பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
 
பாகிஸ்தானில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அந்த நடன நிகழ்ச்சி, மதத்தை அவமதித்து செய்வது போன்று இருந்ததாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில், நடிகை வீணாமாலிக், அவருடைய கணவர் ஆசாத் பஷீர், தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மத அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நடிகை வீணா மாலிக், அவரது கணவர் ஆசாத் பஷீர் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 26 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா 13 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
நடிகை வீணா மாலிக் தனது முழு நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.