ராஜபக்சேவை பிரதமராக்க எனது வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் - பவித்ரா வன்னியாராச்சி


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 27 மே 2015 (22:14 IST)
மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்க எனது வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் இலங்கை முன்னாள் அமைச்சர் என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
 
மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சருமான சுதந்திரா கட்சியை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
 
 
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பவித்ரா வன்னியராச்சி, ”எனது அன்பான நண்பர்களே உங்களை காட்டிக்கொடுக்கவோ, உங்களுக்கு விரோதமாகவோ நான் செயற்படவில்லை.
 
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வேறு எங்கும் செல்லமாட்டேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கவும் எனது வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.
 
மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கடுமையாக பணியாற்றியதாகவும் அவர் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையில் தனது வீட்டையும் பந்தயம் வைக்க தயாரானதாகவும் வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :