1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (23:37 IST)

அமெரிக்க தீர்மானத்தின் மீது நான் பேசவே இல்லை: அன்புமணி விளக்கம்

ஐ.நா.மனித உரிமை குழு கூட்டத்தில், அமெரிக்க தீர்மானத்தின் மீது நான் பேசவே இல்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னையில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற  போர்க்குற்றங்கள் குறித்து, அக்குழு ஆணையர் வெளியிட்ட அறிக்கை மீதுதான் நான் பேசினேன். ஒருபோதும், அமெரிக்க தீர்மானத்தின் மீது நான் பேசவில்லை.
 
ஆனால், இனப்படுகொலை என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை என சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அந்த குற்றச்சாட்டு தவறானது.
 
ஐ.நா. மனித உரிமை குழு, ஆண்டு கூட்டத்துக்கு செல்கிறேன் என நான் அறிவித்த போது, அங்கு இதை பேசுங்கள் என அப்போதே தெரிவித்து இருக்கலாம். எனக்கு அளிக்கப்பட்ட இரண்டு நிமிட அவகாசத்தில், எதைப் பேச வேண்டுமோ, அதை மிகஅழுத்த பதிவு செய்துள்ளேன்.
 
எனது பேச்சை இலங்கை தமிழ் அமைப்புகள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகள் எல்லாம் மனதார பாராட்டியுள்ன என விளக்கம் அளித்தார்.